Popular Posts

Wednesday, August 18, 2010

பில் கேட்ஸ்ஜி அவர்களுக்கு,


கள்ளுக்கொட்டிலிஇருந்து குமாரசாமியின் கடிதம்.

...
எங்கள் இல்லத்தில் புதிதாக ஒரு கணிணி வாங்கியுள்ளோம்.

எங்களுக்கு உங்கள்மென்பொருளினால்
ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு தாங்கள்
என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்
என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம்.

1. கணிணியின் உள்ளே நுழைகையில் கடவுச்சொல் என்னும் இடத்தில் மட்டும்நாங்கள் அடிப்பது ****** என்றே வருகிறது. இது குறித்து எங்களுக்குக் கீபோர்ட் கொடுத்த கந்தப்புவை தொடர்பு கொண்ட போது கீ போர்டில் எந்தத் தவறும்இல்லை என்று உறுதி செய்துள்ளார்.

2. ஸ்டார்ட் என்னும் பட்டன் மட்டுமே உங்கள் மென்பொருளில் உள்ளது. ஸ்டொப்ஏன் இல்லை?


3. உங்கள் மென்பொருளில் 'ரன்' மட்டுமே உள்ளது. 'சிற்' ஏன் இல்லை? எத்தனைநேரம் தான் ஒரே இடத்தில் ஓடிக் கொண்டே வேலை பார்ப்பது?


4. நாங்கள் ஸ்கூட்டர் தான் வைத்திருக்கிறோம். ஆனால் நீங்கள் சைக்கிளுக்குமட்டுமே ஆதரவளிக்கிறீர்கள். எனவே ரீ-சைக்கிள் மட்டுமல்லாதுரீ-ஸ்கூட்டரும் வேண்டும்.


5. "தேடுக" என்னும் பட்டன் இருந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை. எனது மனைவிவீட்டுச் சாவியைத் தொலைத்து விட்டாள். தேடுக பட்டன் அதைத் தேடித் தரமறுக்கிறது. அதை முதலில் சரி செய்யுங்கள்.


6. மைக்ரோசொப்ட் வேர்டை நாங்கள் நன்கு படித்து விட்டோம். எப்போதுமைக்ரோசொப்ட் செண்டன்ஸ் (Sentence) எப்போது வெளியிடுகிறீர்கள்?


7. நாங்கள் கொம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் என்றுவாங்கியுள்ளோம். மை கொம்ப்யூட்டர் மட்டுமே உள்ளது. மற்றெதெல்லாம் எங்கே?


8. மை பிக்சர்ஸுக்குள் தேடினால் எனது படங்கள் எதுவுமே இல்லை. அது எப்போ தருவீங்க?


9. நாங்கள் வீட்டில் தான் கொம்ப்யூட்டர் வைத்திருக்கிறோம். எங்களுக்குமைக்ரோசொப்ட் ஒபீஸ் வேண்டாம். மைக்ரோசொப்ட் ஹோம் தான் வேண்டும். எங்கேகிடைக்கும்?


கூடிய விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்..

நன்றி,

No comments:

Post a Comment