Popular Posts

Wednesday, August 18, 2010

$#காதல் கவிதைகள்$#

உனக்கே உரியவன் நான். 

என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலனாய்  

உன் துணைவனாய்
ஆதலால் உனக்கே உரியவன்நான்.

 ----------------------------------------------------------------------------------

உன் நினைவு 

எதைப் பார்த்தாலும்
உன்னையே நினைக்கிறேன்
உன்னைப் பார்த்தால் மட்டும்
என்னையே மறக்கிறேன்

---------------------------------------------------------------------------------

காதல் உணர்வு  

எனக்கு சொந்தம் ஆக வேண்டிய நீ
இன்னொருவனுக்கு சொந்தம் அனால்
நான் இந்த மண்ணுக்கு
சொந்தம் ஆவேன் 

---------------------------------------------------------------------------------


கண்ணீர் சிந்தினேன் 

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்

------------------------------------------------------------------------------

என் கவிதைகள் 

என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

----------------------------------------------------------------------------------

தலைவி 

என் தலைவி
என் அருகில் வா
உன் மார்பின் வெப்பத்தில் என் கண்ணீர் கரையட்டும்...
நீ சிரிக்கையில் நான் சிதறி போகின்றேன்
காற்றில் உன் கேசம் அசைகையில்
உள்ளே என் இதயம் பதறுகிறது.
நீ நடப்பது என்னவோ நிலத்தில் தான்
ஆனால் அதிர்வுகளை என் இதயத்தில் உணருகிறேன்.
காத்திருத்தல் சுகம் அதுவும் உனக்காய் காத்திருத்தல் தவம்.
என் இதயத்தில் உன் பெயர் எழுதி
என் உதட்டில் கையொப்பம் இட்டவள்
உனக்காய் அழுது என் கண்கள் வறட்சி கொண்டது
வா என் அன்பே
உன் நினைவுகள் தடுக்கி விழுந்தே
நான் காயம் கொள்கிறேன்
மருந்தாய் வா
விடை சொல்ல வா.

----------------------------------------------------------------------------

காதல்  


எத்தனை முறை மனனம் செய்தும்

நினைவில் இல்லை

உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்

அதனையும் நீ பேசினாய்

உன் விழியினால் 

--------------------------------------------------------------------------------

மறக்காது இந்த இதயம 

துடிக்க மறந்தாலும்-உனை
நினைக்க மறக்காது இந்த
இதயம்!!

-------------------------------------------------------------------------------


யாருமில்லை என்றாய்! 

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

-----------------------------------------------------------------------------------

காதலியாய் 

என் தொடக்கங்களுக்கெல்லம் முதலாய்
என் கனவுகளுக்கெல்லம் கலராய்
என் வாத்தைகளுகெல்லாம் ஒலியாய்
என் பார்வைகளுக்கெல்லாம் விழியாய்
என் வாழ்வுக்கு ஒளியாய் நீ இருப்பாய்
என் காதலியாய்

-----------------------------------------------------------------------------------

என் மௌனத்தில் அவள் 

மலரினும் மெல்லிய என் மனமே
எதற்கு விசும்புகிறாய்?
காதலி கிடைப்பாள், காதல் கைகூடும்,
காவியம் படைப்பாய், மாங்கல்யம் நிலைக்கும்,
காலம் பதில் சொல்லும் என்று கற்பனையில்
அரவனைதாயே அதற்காகவா?
இல்லை,
ஆயிரம் மானுடர்கள் அரங்கிலினும்
அவள் கொலுசொலியின் ஸ்வரத்தை மட்டும்
அறியும் திறனை தந்தர்க்காகவா?
முள்ளின் மேல் பழகவைதாய் அவள் முல்லாய்
குத்துகிறாள் என்று....அதை எண்ணியா?
உன் விசும்பல் எனக்கு புரிகிறது...
என் ஜனரஞ்சகமான வலியே..
அவள் அரைவட்ட முகத்தை பார்த்தே என்
அரை வாழ் நாளை கழிக்கலாம் என்று
தேம்பூட்டிநாயே! அதற்காகவா?
அவள் இல்லாத மணிதுளிகள்
உலகின் இருள் என்று அவளை இதயத்திற்குள்
திணித்து கொண்டாயே....
இரவில் தலையணையை தலைவியாய் ஆக்கினாய்...பகலில் தலைவியை
தெய்வம் ஆக்கினாய்...
ஒன்றை புரிந்து கொள்...
என் மனக்கோட்டை அவளுக்காகவே கட்டப்பட்டது.
அங்கு அவளே வாழ்கிறாள்..அவளே இளவரசி.
அவளே மகாராணி...அவளே எல்லாம்....
அங்கு வேறு யாருக்கும் இடமில்லை.
சகோதரத்துவை அறிய வைத்த என் சகியே..
நீ எழுதிய 100பக்க கடிதத்தில் எனை நினைவுக்கு கொண்டுவந்தது....
நீ எழுதிய அந்த கடைசி வாசகம்
"எனை மறந்து விடுங்கள்" என்பது மட்டும் 

_______________________________________________________

என்னுயிர் 
காதலியே...! - காதல் கவிதை

என்னுயிர் காதலியே...! 

என்னுயிர் காதலியே!
உனைக்காதலித்த நாள் முதல்...
நான் காதலையே மறந்விட்டேன்!
காதல் மீதுல்ல வெறுப்பால் அல்ல...
உன் மீது நான் கொண்ட காதலால்..

-----------------------------------------------------------------------------------

Good Night என்றாய்

தொலைபேசியில் நீ எனக்கு
"Good Night" என்றாய்..
தன்னைத்தான் நல்ல இரவு
என்றாய் எண்ணி விடிய மறுக்கின்றது!!

-----------------------------------------------------------------------------------

ஏமாற்றம்  

எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்

அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது

அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்

நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது

திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்

மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது 

-----------------------------------------------------------------------------------

 

No comments:

Post a Comment