Popular Posts

Saturday, August 6, 2011

RADIO

WELCOME MY SITE

RADIO

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&amp;up_myautoplay=true&amp;up_myplayerheight=70&amp;up_myplayerwidth=200&amp;up_mycolor=%23FFFFFF&amp;synd=open&amp;w=230&amp;h=200&amp;title=Tamil+Radio+Gadget&amp;border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&amp;output=js"></script>

Wednesday, March 16, 2011

காதலுக்காக ஒரு கடிதம்-2 

அன்பே...
உன்னை கடந்துச் சென்றபின்புதான்
என் நிழல்கூட
ஏழு வண்ணத்தில் அழைகிறது
என்கூட!

நீ ஏறும் பேருந்து நிறுத்தத்திலிந்து
ஏறுகிறது என் காதல்!
நீ ஏறியதும் பேருந்து
சீறுந்தாகிறது!

கரம், சிறம், சிறகு புறம் நீட்டாதே! என்பது தேவதை உனக்காத்தானடி!

காற்றின் வேகத்தில்
தேவதையுன் சிறகொடியாமலிருக்க கல்லூரியில் எல்லா பேருந்தும்
கண்ணாடி மாட்டி கொண்டது
உனக்காத்தானடி!

எந்த புத்தகம் வாங்கினாலும்
எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறது
உன் பெயரை!

நான் கடவுளிடம்
எல்லாவரத்தையும் கேட்கிறேன்
எல்லாவரமும் நீயாகவே கேட்கிறேன்!

அன்பே!
நீ
எனக்கானவள்

ஏதோ ஒரு காரணம்..
ஏதோ ஒரு வார்த்தை..
உனக்கும் எனக்குமிடையே
பிரிவினை பிரித்து தந்தது..
எதிர் எதிரே பார்க்கும் போது கூட
நீயும் நானும்
எங்கோ பார்த்தபடி கடந்து போவதாய்.......
மௌனம் நமக்கிடையே
பேசிக்கொண்டே இருந்தது...
அந்த மௌனத்தை கலைக்க விரும்பி
ஒவ்வொரு முறையும்
உன்னோடு பேச வருகிற போதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தால்
அந்த சந்திப்பு நம்மை சந்திக்கவே
இல்லை....
அலை பேசி அழைக்கிற ஒவ்வொரு
முறையும் அது நீயாக
இருந்து விடக்கூடாதா
என்கிற ஏக்கம்...
ஆனால்
உன்னை தவிர
அனைவரும் அழைகிறார்கள்
பிறகொருநாள்...
வேறு வழியின்றி நீயும் நானும்
அருகருகே..
நம்மிருவரின் பார்வைகள்
எங்கெங்கோ அலைபாய்ந்து
இறுதியில் நாமிருவரும்
பார்த்துக்கொண்ட போது
வார்த்தைகள் தொண்டைக்குள்ளே
தூக்கு போட்டு கொண்டன..
கலங்கிய விழிகளால்
நீ என்னை பார்த்த போது
பரிதவிக்கிற இதயத்தோடு
உன் கைகளை பற்றி கொண்டேன்..
சிதறி விழுந்த உன் கண்ணீருடன்
நம் ஊடலும்
உடைந்து போனது...

my creations
































Sunday, January 16, 2011

60 நொடிகள் 

*அவள்
என்னை
கடந்து
செல்லும் போது .....

*அவள் சூடிய
மல்லிகை மணம்
காற்றில் கலந்து
என்னுள் பரவும் வேளையில் .....

* நான்
நூறு மாடி கட்டிடத்தின்
மேல் நின்று .....

*அவள் சூடியிருந்த
மல்லிகைக்குள்
குதிப்பது போன்றது .....
அந்த

60 நொடிகள் !

-----------------------------------------------------------------------------------

தேடி அலைகிறேன் உன்னை...!!!! 

தனியாய்
தேடி அலைகிறேன்
நாம்
ஒன்றாய் சுற்றிய
இடங்களில்

நீ
எங்கும்
இல்லை

கோவிலுக்கு
வருவாயென
காத்திருந்தேன்
நீ
அங்கும்
வரவில்லை

உள்ளே
இருக்கும்
கடவுளிடமும்
பதில் இல்லை

என்
கனவில்
விழித்தே இருக்கிறேன்
நீ
வரக்கூடுமென

என்
கனவிலும்
நீ
வருவதில்லை

காற்றிடம் கேட்க்கிறேன்
நேற்றுப் பெய்த
மழையிடம் கேட்க்கிறேன்
உன்
வீடு செல்லும்
பாதையிடம் கேட்க்கிறேன்
எதனிடமும்
பதில்
இல்லை

தேடி அலைவதில்
தேய்ந்து கொண்டிருக்கிறது
என்
நம்பிக்கை

எங்கே
சென்றாய்

ஏன்
என்னை
விட்டுச்
சென்றாய்

விடைதெறியாமல்
விடைபெறுகிறேன்
யாராவது
அவளை
பார்க்க நேர்ந்தால்
அவளிடம்
சொல்லுங்கள்
இன்னும்
காதலுடனும்
கனவுகளுடனும்
காத்திருக்கிறேன்
என்று .......!!!! 

-----------------------------------------------------------------------------------